Oct 13, 2018

ஏற்க வேண்டியதை ஏற்க !

ஏற்க வேண்டியதை ஏற்க 

                      விலக்க வேண்டியவற்றை விலக்கி, ஏற்க வேண்டியவற்றை ஏற்று, இஷ்ட தெய்வத்திடம் ஒருமுகமான   ஈடுபாட்டுடன் மனத்தை நிலைநிறுத்தி , பிரார்த்தனை செய்தால் எல்லாம் நடக்கும்.


-அன்னை ஸ்ரீசாரதாதேவி 



வந்த வரவை மறந்து உலகாய் வாழந்து கன்ம 
பந்தம் உற உன்னைப் படிப்பிக்கக் கற்றவன் யார்?
இந்த மதி ஏன் உனக்கு இருக்கு? என் மதி கேள்! என்னாலே 
சந்ததம் நெஞ்சே ! பரத்திற் சாரின் இன்பம் உண்டாமே. 

- தாயுமானவர் பாடல் , 29.7

இஷ்ட தெய்வம்,

இஷ்ட தெய்வம் 


                         'இதுதான் எனது இஷ்ட தெய்வம்'  என்று ஒரு தெய்வத்தின்
மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை கொண்டால் அவன் கடவுளை அடைவது உறுதி; அவன் கடவுளின் காட்சியைப் பெறுவான். 

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


வேதம் எத்தனை ? அத்தனை சிரத்தினும் விளங்கும் 
பாத ! நித்திய ! பரம்பர ! நிரந்தர ! பரம !
நாத ! தற்பர! சிற்பர வடிவமாய் நடிக்கும் 
நீத ! நிர்க்குண! நினையன்றி ஒன்றும் நான் நினையேன்.

- தாயுமானவர் பாடல் , 25.5

Oct 11, 2018

எல்லோருக்கும் தாய்





எல்லோருக்கும் தாய் 

                    ஜகதம்பாவான காளிதேவிதான் எல்லோருக்கும் தாய். நன்மை தீமை எல்லாம் ஆவளிடமிருந்தே தோன்றியுள்ளன, எல்லாவற்றையும் அவளே தோற்றுவித்திருக்கிறாள்.


- அன்னை ஸ்ரீசாரதாதேவி 




யாது மாகி நின்றய் - காளி! 
                   எங்கும் நீநி றைந்தாய், 
தீது நன்மை யெல்லாம் - காளி 
தெய்வ லீலை யன்றோ 

- பாரதியார்