Oct 11, 2018

எல்லோருக்கும் தாய்





எல்லோருக்கும் தாய் 

                    ஜகதம்பாவான காளிதேவிதான் எல்லோருக்கும் தாய். நன்மை தீமை எல்லாம் ஆவளிடமிருந்தே தோன்றியுள்ளன, எல்லாவற்றையும் அவளே தோற்றுவித்திருக்கிறாள்.


- அன்னை ஸ்ரீசாரதாதேவி 




யாது மாகி நின்றய் - காளி! 
                   எங்கும் நீநி றைந்தாய், 
தீது நன்மை யெல்லாம் - காளி 
தெய்வ லீலை யன்றோ 

- பாரதியார் 



Oct 9, 2018

மாயையை வெட்டி ஏறி



மாயையை வெட்டி ஏறி 


                         மகளே ! இந்த உலகில் கணவனாகட்டும், மகனாகட்டும்,
உடம்பாகட்டும்,எதுவுமே உண்மையல்ல. இந்த மாயைகளின் பணத்தை வெட்ட முடியாவிட்டால் சம்சாரக் கடலைக் கடக்க இயலாது. இனி,'இந்த உடம்புதான் நாம்' என்று கருதிக்கொண்டிருக்கிறோமே அதுவும் மாயைதான்.கடைசியில் இந்த மாயையையும் வெட்டி எறிந்தேயாக வேண்டும்.

- அன்னை ஸ்ரீசாரதாதேவி 




மாய விளக்கது நின்று மறைந்திடும்

தூய விளக்கது நின்று சுடர்விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்

சேய விளக்கினைத் தேடுகின்றேனை

-  திருமந்திரம் , 2367

Oct 2, 2018

இறைவனும் ஐசுவரியமும்

இறைவனும் ஐசுவரியமும் 

   

          இறைவனும் அவனுடைய ஐசுவரியமும். ஐசுவரியம் ஓரிரு நாட்களுக்குத்தான். இறைவனே  உண்மை. வித்தைக்காரனும் அவனுடைய ஜால வித்தையும் ,ஜால வித்தையைப் பார்த்து மக்கள் பரிமத்து நிற்கின்றனர்; ஆனால் அத்தனையும் பொய், வித்தைக்காரன்தான் உண்மை.பணக்காரனும் அவனுடைய தோட்டமும். தோட்டத்தை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். சொந்தக்காரனைத் தேட வேண்டும்.  

-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 

நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே

-பட்டினத்தார் பாடல் ,317