May 7, 2020

மூடநம்பிக்கை - 2

மூடநம்பிக்கையைக் கைவிடு 
பாகம் - 2

            துணிச்சலான வீரம் மிக்கவர்களே இப்பொழுது நமக்குத் தேவை. நமது தேவையெல்லாம் ரத்தத்தில் வேகம், நரம்புகளில் வலிமை , இரும்பை ஒத்த தசைகள். பலவீனப்படுத்துகின்ற வளவகொளகொள கருத்துக்கள் எதுயும் நமக்குத் தேவையில்லை..... மதத்தில் மர்மத்திற்கு இடமில்லை.
*              *              *
            மற்ற விஷயங்களில் போலவே மதத்திலும் உங்களைப் பலவீனப்படுத்துகின்ற அனைத்தையும் விலக்கிவிடுங்கள். அவற்றுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் வேண்டியதில்லை. ரகசியங்களை நாடுவது மூளையைப் பலவீனப்படுத்துகிறது.
*              *              *
            மர்ம வித்தைகளை நாடுவதும் சரி, மூட நம்பிக்கைகளும் சரி இரண்டுமே பலவீனத்தின் அடையாளங்கள்; சீரழிவின் அடையாளங்கள்; மரணத்தின் அடையாளங்கள். அவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வலிமையாக இருங்கள், உங்கள் சொந்தக் கால்களில் நில்லுங்கள்.
*              *              *
            எதாவது ஒன்று உங்கள் உடலை, அறிவை , ஆன்மிக உணர்வைப் பலவீனமாக்குமானால் அதனை விஷமென ஒதுக்குங்கள், அதில் உயிர்த் துடிப்பில்லை, அது உண்மையாக இருக்க முடியாது. இந்த ரகசிய வித்தைகளுள் எதோ சிறிய அளவில் உண்மை இருக்கலாம். அனாலும் அவை பொதுவாகப் பலவீனத்தையே வளர்க்கின்றன.
*              *              *
            ரகசியம் என்றோ அற்புதம் என்றோ யோக நெறியில் எதாவது சொல்லப்படுமானால் அதை உடனே நீக்கிவிட வேண்டும். வலிமை வாழ்வில் சிறந்த வழிகாட்டி.
*              *              *
            வாழக்கை முழுவதுமான எனது பனியின் அனுபவத்தில் மனப்பூர்வமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்;ரகசிய வித்தைகள் (Occultism) எப்போதும் மனிதர்களுக்குக் கேடு விளைவிப்பவையாக, அவர்களைப் பலவீனர்களாகக்குவதாகவே உள்ளன. நமக்கு வேண்டியது வலிமை. வேறு எந்த இனத்தையும்விட இந்தியர்களான நமக்கு வலிமையையும் சிந்தனையில் உறுதியும் வேண்டும் எல்லாத்துறைகளிலும்  நமக்கு வேண்டிய அளவு நுண்ணிய விஷயங்கள் உள்ளன. எத்தனையோ நூற்றாண்டுகளாக நாம் இந்த ரகசியங்களுடன்தன வாழ்ந்து வருகிறோம். விளைவு? நமது அறிவு ஆன்மிகமும் சீரமைக்க முடியாத அளவுக்குக் கெட்டுவிட்டன; நமது இனம் அறியாமையின் அடித்தளத்திற்கே பொய்விட்டது.
சுவாமி விவேகானந்தர் 

No comments:

Post a Comment