May 6, 2020

மூடநம்பிக்கை - 1

மூடநம்பிக்கையைக் கைவிடு 
பாகம் - 1
                  
            இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை உடைய முட்டாள்களாக இருப்பதைவிட நீங்கள் நாத்திகர்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஏனென்றால் நாத்திகனிடம் உயிர்த்துடிப்பு இருக்கிறது, அவனிடம் நீங்கள் எதாவது நல்லதை  உருவாக்க முடியும். ஆனால் மூடநம்பிக்கை மட்டும் நுழைத்து விடுமானால் சிந்திக்கும் திறன் போய்விடுகிறது, மூளை மழுங்கிவிடுகிறது.

*              *              * 

            ஏமாற்றுக்காரர்கள், செப்படி வித்தைக்காறார்கள் இவர்களின் கைப்பாவையாக இருப்பதைவிட நம்பிக்கையற்றவராக இருந்து இறுந்துபோவது மேல். பயன்படுத்துவத்துவதற்காகத் தான் பகுத்தறிவு உங்களிடம் உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தியதாக உலகிற்கு நிரூபியுங்கள்.
*              *              *

            தாம் அளித்த பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் கண்முடித்தனமாக நம்புகின்ற ஒருவனைவிட பகுத்தறிவைச் செயல் படுத்துகின்ற ஒருவனையே, அவன் நம்பாதவனாக இருந்தாலும், ஆண்டவன் மன்னிப்பார் என்று நான் நினைக்கிறேன்.
 *              *              *

            அவனுக்கு வலுவான மூளை வேண்டும், அசட்டுக் கருத்துக்கள் இல்லாத தெளிந்த மனம் வேண்டும், மனத்தை மூடியிருக்கும் மூட நம்பிக்கைகளை ஊடுருவி, தன்னுள் ஆழத்தில் உள்ள தனி உண்மையை அவன் அறிய வேண்டும். எல்லா நிறைவும் எல்லாச் சக்திகளும் ஏற்கனவே தன்னுள் உள்ளன. அவற்றைப் பிறர் தனக்குத் தரத் தேவையில்லை என்பதை அப்போது அவன் உணர்வான்.

 *              *              *

            ஒரு பழை நூலில் உள்ளது, முன்னோர்கள் காலத்திருந்து உங்கள் கைக்கு வந்தது, உங்கள் நண்பர்கள் நம்பச் சொல்கிறார்கள் என்தற்காகவெல்லாம் எதையும் நம்பாதீர்கள். நீங்களே சிந்தித்துப் பாருங்கள், நீங்களே உண்மையைத் தேடுங்கள், நீங்களே உணருங்கள்... மூளை  பலம் அற்றவர்களும், உறுதி இல்லாதவர்களும் ,தைரியம் அற்றவர்களும் உண்மையைக் காண முடியாது.  
சுவாமி விவேகானந்தர் 

No comments:

Post a Comment