Mar 25, 2020

உபதேச மொழிகள்


உபதேச மொழிகளில் சில 

              1. உங்கள் சாதனைகளைப் பற்றி நீங்கள் எல்லோரிடமும் கூறக் கூடாது. 
                     2. புறத்தில் ஒன்றுமில்லை; எல்லாம் அகத்திலேயே உள்ளது. அகத்தின் இசைக்கு முன்னர் புற இசைகள் எம்மாத்திரம்! ஆஹா அதன் இனிமை! பஞ்சவடியில் பாடிக் கொண்டுருக்கும்போது ஸ்ரீராமகிருஷ்ணர் தன்னுள்ளிருந்தே வீணையின் இனிய நாதத்தைக் கேட்டார்.
                     3. இறைவனை எங்கும் நிறைந்தவனாகவும், எல்லையற்றவனாகவும் தியானிக்க வேண்டும். இதற்கு இமயமலையையோ, பரந்த கடலையோ வானத்தையோ ஒருவன் பார்த்து, மனத்தில் நினைக்க வேண்டும்.
                     4. அகாயத்தில் நடப்பது என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதை போன்றதே 'நூல்களைப் படிப்பதால் காமத்தை வென்றிடுவேன்; மனத்தை அடக்கி விடுவேன்' என்பதும். 
                      5. இறைவனிடம் பயம் ஏற்பட்டாலன்றி நல்லொழுக்கம் உண்டாகாது. அதாவது இறைவன், மறுபிறவி இவற்றில் நம்பிக்கை வேண்டும்.
                       6. கங்கை நீர் எல்லா நீரிலும் புனிதமானது. அது ஆசைகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி இஷ்டதெய்வத்தை அறிய உதவி செய்கிறது. 'கங்கை நீர், பூரி ஜகநாதரின் மஹா பிரஸாதம், பிருந்தாவனத்தின் புனித மண் - இவை பிரம்மமே ஆகும்' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியுள்ளார். 
                       7. குண்டலினி சக்தி  கீழ் நோக்கிச் சென்றால் ஒருவனின் மனமும் கீழான விஷ்யங்களையே அதாவது சிற்றின்ப நாட்டத்தையே கொள்கிறது.
                        8. மனிதனிடம் சத்துவ குணம் ஓங்கும்போது, இறைக் காட்சிக்காக அவன் ஏங்குகிறான்; இறைவனது புகழைப் பாடுவதிலும் அவனைத் தியானிப்பதிலுமே இன்பம் காண்கிறான். 
                        9. சிராத்தம் முதலிய சடங்குகளிலுள்ள உணவை உண்ணக்கூடாது;அது சாதகனுக்குத் தீங்கு விளைவிக்கும். 

No comments:

Post a Comment