மூடநம்பிக்கையைக் கைவிடு
பாகம் - 3
நமது மனத்தை பலவீனமாக்கி , மூட நம்பிக்கையில் ஆழ்த்தி, மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை அசையுறச் செய்பவர்களாகவும் அற்புத்ச் செயல்களை நம்புபவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை.அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர , உண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன. வலிமையே தேவையான ஒன்று.
* * *
வீரம் மிக்க ஓரினத்தை உருவாக்க வேண்டுமானால் புத்துணர்ச்சியும் சிந்தனையில் ஊக்கமும் வேண்டும். உலகம் முழுவதற்குமே ஊக்கம் அளிப்பதற்குத் தேவையானதை விட அதிக ஆற்றல், உபநிடதங்களில் உள்ளன. ஆனால் அதைச் செயல்முறைப் படுத்தவேண்டும்.
* * *
மனிதனில் உள்ள இயற்கை ஆற்றலின் வெளிப்பாடே மதம்.... அது எப்போதும் ஆற்றலின் வெளிப்பாடு.
* * *
நான் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதுஇருப்பதைவிடத் தாழ்ந்தவர்களாக, பலவீனர்களாக நீங்கள் மாறுவதை என்னால் பார்க்க முடியாது.உங்களுக்காகவும் உண்மையின் பொருட்டும் நான் கடமைப்டட்டுள்ளேன்.ஆகவே தான் என் இனம் இழிநிலையை அடைவதை எதிர்த்து, 'போதும், போதும்' என்ற கதறுகிறேன்.பலவீப்படுத்துகின்ற இந்த ரகசிய வித்தைகளை விட்டுத் தள்ளுங்கள்.வலிமை உடையவர்களாக்குங்கள்... உபநிடத உண்மைகள் உங்கள் முன்னாள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளூங்கள். அப்போது இந்தியாவின் கதிமோட்சம் உறுதி.
* * *
ஒளி வீசுகின்ற, வலிமை தருகின்ற, மேலான தத்துவமாகிய உங்கள் உபநிடதங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இந்த எல்லா ரகசிய வித்தைகளிலிருந்தும் எல்லாப் பலவீனப் பொருள்களிலிருந்தும் விலகிவிடுங்கள்.
* * *
சேர்ந்துபோய் இருப்பது வேறு எதுவாகவும் இருக்கலாம்; அது ஒருபோதும் ஆன்மிகம் ஆகாது. பிரார்த்தனைமூலம் இறைவனை நெருங்கவதைவிட, உற்சாகத்தத்தாலும் புன்முறுவலாளும் இன்னும் அதிகமாக நெருங்கிச் செல்ல முடியும்.
* * *
மனவலிமை இழந்தவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. பிறவிகள்தோறும் அவர்கள் அழுது அரற்றிக்கொண்டே வந்துவந்து போகிறார்கள்.
* * *
தாழ்ந்தவனாம் , பலவீனனாம்! ஏன் இந்த சிந்தனை?நான் ஆதிபராசக்தியின் குழந்தை,எனக்கு என்ன நோய், என்ன பயம் ,என்ன குறைவு? 'தீனன்,பலவீனன்' என்ற எண்ணத்தை வேரோடு பிடிங்கி எறியுங்கள்.
* * *
பலவீனம் , தளைகள் எல்லாமே கற்பனை .... பலவீனமடையாதீர்கள்! .... எழுந்து நில்லுங்கள்! அச்சம் வேண்டாம்!... எனக்குத் தெரிந்த மதமெல்லாம் அவ்வளவுதான்.
- சுவாமி விவேகானந்தர்