Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

May 6, 2020

உறவுகள் மேம்பட...

உறவுகள் மேம்பட...

  • நானே பெரியவன், நானே சிறந்தவன்  அகந்தையை (Ego) விடுங்கள்.    
  • அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள் (Loose Talk).
  • எந்த விஷயத்தையும் ப்ரிச்சனைகளையும் நாசுக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக்கொடுங்கள் (Compromise)
  • சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள் (Tolerance).
  • எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிரூக்காதீர்கள்.
  • உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்,கொஞ்சம் தளர்த்தி கொள்ளுங்கள்.(Flexibility)
  • மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் ,இனிய , இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (Courtesy).
  • புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்துகொள்ளாதீர்கள்.
  • பிரச்சன்னைகள் ஏற்படும் பொது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். 

Oct 22, 2018

மூன்று பதுமைகள்

மூன்று பதுமைகள் 


உப்பு, துணி, கல் போன்றவற்றால் செய்யப்பட்ட மூன்று வகை பதுமைகள் உள்ளன. அவைகளைத் தண்ணீரில் போட்டால், முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் நிறைய தண்ணீரைத் தன்ளுள் இழுத்துக்கொள்ளும். மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது.


இதில் கூறப்பட்ட,
முதலாவது பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு இணைந்து ஐக்கியமாகி விடும்.
இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் ஏராளமான தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக் கொள்ளும்.
மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது. பரமாத்மா விடம் சேர்ந்து விடும்.


முதலாவது பதுமை மனிதனைக் குறிக்கும். இரண்டாவது வகை பதுமை உண்மையான பக்தனைக் குறிக்கும். மூன்றாவது வகை பதுமை கொஞ்சம் கூட ஞானம் நுழையாத இருதயத்தை உடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.