சொர்கம் என்பது மூட நம்பிக்கை!
சொர்கம் என்பது ஆசையின் விளைவாக ஏற்பட்ட ஒரு மூட நம்பிக்கை. ஆசை என்பது ஒரு நுகத்தடி போன்றது. மனிதனை கீழ்நிலைக்கு தள்ளக்கூடியது. எல்லாம் கடவுள் மயம் என்ற கருத்துத் தவிர வேறு எந்த எண்ணத்துடனும் எதையும் அணுகாதே. அப்படி அணுகினால் தீமைதான் நமக்குத் தென்படுகிறது. ஏனெனில் மயக்கம் என்னும் போர்வையால் அதை மறைத்து விடுவதால் அது தீமையாகத் தென்படுகிறது. இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு ஆனந்தமாக இருங்கள். எல்லா மயக்கங்களிருந்தும் விடுபட்டு இருப்பதே சுதந்திரம் ஆகும்.
- சுவாமி விவேகானந்தர்