Nov 8, 2018

பிராணாயாமம்

பிராணாயாமம்

                             நம் மனம் அமைதியின்றி இருக்கும் போது நம்முடைய சுவாசம் வேகமாக, ஒழுங்கற்று இருப்பதைக் காணலாம். இந்த மனத்தை அமைதிப்படுத்த வேண்டுமானால் நம் கவாசத்தை முறைப்படுத்த வேண்டும். ஆழ்ந்த சுவாசிக்கின்ற முறையான பயிற்சி மனத்தை நிலை நிறுத்த உதவுகிறது.

                             பிராணாயாமம் (அதாவது சுவாசத்தை அடக்கிப் பயிற்சி செய்வதன் மூலம் பிராணனைக் கட்டுப்படுத்து தல்) பயில்வதன் மூலம் மனத்தை அடக்க முடியும். ஆனாலும் பிராணாயாமத்தை ஒரு குருவினிடமிருந்து நேரடியாகக் கற்று தூய்மையான சூழ்நிலையில் பயில்வது மிகவும் நல்லது. 

                பிரம்மச்சரியம் கடைப் பிடிக்காதவர்களும், நோய் வாய்ப்பட்ட இருதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் உடையவர்களும் பிராணாயாமம் செய்தல் கூடாது.



Nov 2, 2018

உண்மையான ஞானம்


உண்மையான ஞானம் 

                                மக்கள் தங்களுடைய நிலத்தை அளவுகோல் வைத்து அளந்து வரப்புப் போட்டு பிரித்து பங்கிட்டுக் கொள்கின்றனர். ஆனால் தலைக்கு மேல் எங்கும் பரந்திருக்கும். ஆகாயத்தை அதுபோல் பங்கிட்டுக்கொள்ள முடியாது. பகுக்க முடியாத அவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு உள்ளது.
                             அதேபோல் ஞானம் இல்லாதவனே தனது மதம்தான் உண்மையானது என்றும், உயர்ந்து என்றும் கூறுவான். ஆனால் உண்மையான ஞானம் அவன் மனதில் உதயமாகும்போது, இந்த மதச் சண்டைகளை எல்லாம் கடந்து அகண்ட சச்சிதானதப் பொருள் ஒன்று இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வான். 


Oct 30, 2018

எழு நிலைகள்


எழு நிலைகள் 

                    வேதங்களில் மனதின் ஏழு நிலைகளைப் பற்றிய வருணனைகள் கூறப்பட்டுள்ளன. இவை மனதின் வெவ்வேறு நிலைகளாகும். உலக விவகாரங்களில் மனம் ஆழ்ந்து  கிடக்கும்போது காமம், மூலம், நாபி எனும் கீழ் இடங்களில் ' மனம் வாழ்கிறது.

                    அப்போது மேல் நோக்கிய பார்வை மனதிற்கு உண்டாவதில்லை. இந்த நிலையில் உள்ளம் அதன் உயர்ந்த காட்சிகளை இழந்து விடுகிறது. 

                    காம உணர்ச்சிகளிலேயே அது சஞ்சரித்துக் கொண்- டிருக்கும். இதயம் மனதின் நான்காவது பூமி. மனம் இந்த நிலைக்கு வரும்போது முதன்முதலாக ஆத்மிக ஒளி ஏற்படு கிறது. ஜோதி காட்சியை ஒருகணம் பெறுகின்றது. ஒளிமய மான காட்சி கிடைக்கிறது.

                    மனிதன் ஈசுவர ஜோதியைக் கண்டு பேசும் சக்தி இழந்து ஆச்சரியத்தோடு 'ஆ! இது என்ன! இது என்ன!' என்று மட்டும் கூறுகின்றான். இதற்குப் பிறகு அவன் மனம் கீழ்நோக்கி, அதாவது... உலகப் பொருட்களையும் சம்சாரத்தையும் நோக்கிப் போவதில்லை.

                    மனதின் ஐந்தாவது நிலை தொண்டை (கண்டம்). மனம் தொண்டையை அடைந்ததும் அவித்யை, அஞ்ஞானம் எல்லாம் நீங்கிய நிலையை அடைகிறது.

                    கடவுளைப் பற்றிய பேச்சைத் தவிர, வேறு எந்தப் பேச் சையும் அவன் கேட்பதற்கோ, பேசுவதற்கோ விரும்பு வதில்லை . அப்படி வேறு யாராவது அவனிடம் பேசினால் அவன் அப்போதே அந்த இடத்தை விட்டு எழுந்து போய் விடுவான்.

                    மனதின் ஆறாவது நிலை, அதாவது... பூமி (கபாலம்) புருவ மத்தியாகும். மனம் அந்த நிலையை அடைந்து அங்கு தங்கும்போது இரவு பகலாக இறைவனின் உருவக் காட்சியைப் பார்க்கிறது.

                    அந்த நிலையிலும் 'நான்' என்பது, சிறிது இருக்கிறது. ஈடு இணையற்ற அந்த உருவத்தின் அழகைக் கண்டு சாதகன் பித்தனாகிறான். அந்த உருவத்தைத் தொடவும், அணைக் கவும் பெரிதும் விரும்புகிறான். ஆனால் அது முடிவதில்லை . உச்சந்தலை, அதாவது... தலையின் உச்சியில் மனதின் ஏழாவது பூமியுள்ளது. மனம் அந்த இடத்தை அடையும் போது சமாதி ஏற்படுகிறது. பிரம்ம தரிசனம் கிடைக்கிறது.

                    நேராக பிரம்மத்தைக் காண்கிறான். ஆனால் அந்த நிலையில் அவன் உடல் அதிக நாள் நீடிப்பதில்லை . புற உலகை மறந்தவனாகிறான். எப்போதும் சுய நினைவு அற்ற நிலை அது. இதுவே பிரம்மஞானியின் நிலை. சமாதி நிலையை அடைந்து விட்டால் எல்லாக் காரியங்களும் நம்மை விட்டு விலகி விடுகின்றன. பூஜை, ஜபம் போன்ற பக்தி சம்பந்தமான காரியங்களும் விஷயப்பற்றுள்ள செயல்களும் விலகி விடுகின்றன . 




ழு நிலைள்