Oct 16, 2018

தாமதிக்காமல் கூவி அழை


தாமதிக்காமல் கூவி அழை 

                உடல் இதோ இந்தக் கணம்  இருக்கிறது. அடுத்த கணம் இல்லை. மறைந்து விடுகிறது. எனவே தாமதிக்காமல் இறைவனைக் கூவி அழைக்க வேண்டும்.  

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 


இவ்வுடம்பு நீங்கும் முனே 
எந்தாய்! கேள்! இன் அருளாம் 
அவ்வுடம்புக்குள்ளே 
அவதிரிக்கக் காண்பேனோ? 

- தாயுமானவர் பாடல் , 46.27

நிலையற்ற உறவுகள்


நிலையற்ற உறவுகள் 


               உலகின் உறவுகள் நிலையற்றவை. இன்று அவையே எல்லாம் போல் தோன்றும். நாளை மறைத்துவிடும். உனது உண்மையான உறவு இறைவனுடன், குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருடன்.

- அன்னை ஸ்ரீசாரதாதேவி 


தந்தை , தாய் , மகவு, மனை , வாழ்க்கை , யாக்கை
சங்கம் அனைத்தும் மௌனி அருள் தழைத்தபோதே 
இந்திர சலாம் கனவு கானல் நீராய் 
இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே!


- தாயுமானவர் பாடல் , 40.1  

ஞானத்தின் அடையாளம்


ஞானத்தின் அடையாளம் 

                     ஞானத்திற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன.          ஒன்று திடமான புத்தி. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், துயரங்கள், இடையூறுகள், ஆபத்துகள் வந்தாலும் கொல்லன் பட்டறைக் கல் போல் அசையாதிருத்தல். இரண்டாவது அடையாளம் அண்மை , விடாமுயற்சி. 

- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் 

யானேதும் பிறப்பஞ்சேன்; 
இறப்பதனுக் கென்கடவேன்.
வானேயும் பெறில்வேண்டேன் 
மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் 
சிவனேயெம் பெருமான்எம்
மானேயுன் அருள்பெறுநாள் 
என்றென்றே வருந்துவனே.

- திருவாசகம் , 5.12