வீண் விவாதங்களில் பயன் இல்லை
தீவிரமான பக்தியும் , மேலான ஞானமும் ஒன்றே. கடவுளைப் பற்றி வீண் விவாதங்களில் பயன் இல்லை. பக்தி பூண்டு பணிவிடை செய்ய வேண்டும்.
உலகத்தையும்,உலக விவகாரங்களையும் விட்டொழித்து விடு. இளம் செடியின் நிலையிலிருக்கும் நீ இவ்வாறு செய்து தான் ஆகவேண்டும். அல்லும் பகலும் இறை நினைவாகவே இரு. கூடியவரை வேறு எதையும் எண்ணாதே. அன்றாடத் தேவைகளுக்கு உரிய எண்ணங்களைக் கடவுளுடன் இணைத்தே எண்ணிவிடலாம். நினைப்பதையும், உண்பதையும், பருகுவதும் இறைவன் நினைப்பாகவே செய். அனைத்திலும் இறைவனையே காண இயலும். பிறரிடம் பேசும் போதுஎல்லாம் கடவுளைப் பற்றியே பேசு. இது மிகவும் நன்மை பயக்கும்.